தேங்காய் சட்னி (12)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1 மூடி

பொட்டுக்கடலை - 30 கிராம்

சிவப்பு மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 4

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 1/4 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி சிவப்பு வத்தலை வறுக்கவும்.

பின் மிக்ஸியில் தேங்காய், வறுத்த சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு சுத்து சுத்தி பின் பொட்டுக்கடலை,உப்பு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.பின் கறிவேப்பிலை போட்டு வதக்கி சட்னியில் ஊற்றவும்.

சுவையான தேங்காய் சட்னி ரெடி.

குறிப்புகள்: