தேங்காய் சட்னி (11)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - அரை மூடி
பூண்டு - ஒரு பல்
பச்சை மிளகாய் - 5
புளி - ஒரு துளி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை துருவி கொள்ளவும். துருவிய தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
எண்ணெய் சூடனாதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் கொட்டவும்.