தேங்காய்ப்பூச் சம்பல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பூ - 1 கப்

செத்தல் மிளகாய் - 5 அல்லது தேவையான காரத்திற்கேற்ப

வெங்காயம் - 4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி

பொடியாக வெட்டிய இஞ்சி - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்து பொருட்களையும் அம்மி அல்லது கிரைண்டர் அல்லது மிக்ஸி இல் போட்டு சிறிது தண்ணீர் விட்டு (2 /3 மேசைக்கரண்டி) நன்கு அரைக்கவும்.

சுவையான சம்பல் தயார்.

குறிப்புகள்:

இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.