தேங்காய்ச் சட்னி
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒரு மூடி
கடலை - 100 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு கிராம்
எலுமிச்சம்பழம் - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள் (தேங்காயைப் பூப்போல துருவிக் கொண்டால் அரைப்பது சுலபம்).
கல் உரல் அல்லது மிக்ஸியில் தேங்காய் துருவல் மற்றும் காம்பு நீக்கிய பச்சை மிளகாயைப் போடவும்.
உடைத்த கடலையையும் உப்பையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த கலவையில் எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு பிழியுங்கள்.
கடுகு, உள்ளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து சட்னியில் விட்டு கலந்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு உபயோகியுங்கள்.
எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக புளியையும் உபயோகிக்கலாம்.