தக்காளி மிளகு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 1/2

மிளகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு

உளுந்து

நல்லெண்ணை

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகை முதலில் அரைத்துக்கொள்ளவும்.

அதனோடு தக்காளி, வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

எண்ணை சட்டியில் நல்லெண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து இறக்கி வைத்துள்ள சட்னியில் சேர்ககவும்.

குறிப்புகள்: