தக்காளி சட்னி (8)
தேவையான பொருட்கள்:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக அரிந்தது) - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முழுமிளகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
பழுத்த தக்காளி (பொடியாக நறுக்கியது) - 4
கொத்தமல்லித்தழை - கொஞ்சம் மேலே தூவ
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெயை காய வைத்து முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலையை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அப்படியே தனலில் (தீயை சிம்மில் வைக்கவும்).
தக்காளி நன்கு வெந்து எண்ணெய் மேலே மிதக்கும். அப்போது இறக்கி விடவும். கடைசியில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.