தக்காளி சட்னி (6)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 4
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டை சிவக்க வதக்கவும்.
அடுத்து பருப்பு வகைகளை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்துக்கிளறவும். அத்துடன் மிளகாய் சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து வதக்கி நன்கு ஆற விட்டு சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்