தக்காளி சட்னி (14)
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 3
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - அலங்கரிக்க
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியையும் தேங்காயையும் நன்கு அரைத்து தனியாக வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றவும் .
அதில் மிளகாய் தூள்,தனியா தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு போட்டு தேவையான தண்ணீர் விடவும்.
3 விசில் வரும் வரை வேக விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.