தக்காளி சட்னி (11)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி - 4
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய் வற்றலை முதலில் மிக்சியில் அரைத்து கொண்டு, பிறகு தக்காளியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு கடுகு வெடித்தவுடன் பூண்டை நன்கு மசித்து போடவும்.
அரைத்த தக்காளியை அதில் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சட்னி ரெடி.