தக்காளி சட்னி (10)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 3 பல்
உப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 5 தேக்கரண்டி
செய்முறை:
தக்காளியை கழுவி தண்ணீர் போக துடைத்துவிட்டு எண்ணெயில் மிதமான சூட்டில் தோல் சுருங்கும்வரை வதக்கவும்.
அதன் பிறகு, அந்த எண்ணெயிலேயே வெங்காயத்தையும் வேகும் அளவுக்கு ஆனால் முறுகிவிடாமல் வதக்கவும்.
காய்ந்த மிளகாயையும் பூண்டையும் அதுபோல் தனித்தனியாக வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய தக்காளி சூடு ஆறியவுடன் அதன் தோலை உரித்துவிட்டு, வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஏற்கனவே வதக்கிய அதே எண்ணெயை மீண்டும் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்துவைத்துள்ள கலவை மீது ஊற்றி கலக்கி வைக்கவும்.
குறிப்புகள்:
இது இட்லி, தோசையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.