தக்காளிச் சட்னி (2)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 10
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் - அரை மூடி
மிளகாய்வற்றல் - 3
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மல்லி, கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் முதலியவற்றைப் போட்டு சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களுடன் துருவிய தேங்காய் மற்றும் கசகசாவினைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியவுடன் அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி முக்கால் பாகத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சிறிது தண்ணீருடன் சேர்த்து ஊற்றி கொதிக்கவிடவும்.
சுமார் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு உப்பைச் சேர்த்து இறக்கிவிடவும்.
சுவையான சட்னி ரெடி.