தக்காளிச் சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1 மூடி

தக்காளிப்பழம் - 4

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காயுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு முதலியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

அரைத்து வைத்துள்ள விழுதில் தாளித்ததைக் கொட்டிக் கிளறிவிடவும்.

குறிப்புகள்: