சௌசௌ தோல் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சௌசௌ - ஒன்று (தோல்)

பெரிய வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 4

உளுந்து - 1/4 கப்

புளி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சௌசௌவின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும்

பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்

வதங்கியதும் அதில் வெங்காயம், சௌசௌ தோல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

கடைசியாக புளி சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்கவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, நாண் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

சௌசௌ தோலை ரொம்ப வதக்கினால் அதில் இருக்கும் தாது சத்துக்கள் அழிந்துவிடும்.

பச்சை வாசனை பிடிக்காதவர்கள் மட்டும் நன்கு வதக்கலாம்