சேனைக்கிழங்கு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 100 கிராம்

பொட்டுக்கடலை - 50 கிராம்

பழுத்த மிளகாய் அல்லது பச்சைமிளகாய் - 6

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

சேனைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து சிறிது, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கிய கிழங்கு, பொட்டுக்கடலை, மிளகாய், உப்பு போட்டு அரைத்து, கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த சட்னியில் கொட்டவும்.

குறிப்புகள்: