சுவையான தேங்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
இஞ்சி - சிறு நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, இஞ்சி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் 30 வினாடி அரைக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்.