சுலப கத்தரிக்காய் கொத்ஸு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
பச்சை மிளகாய் - 4
பூண்டு பல் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
பெரிய வெங்காயம் - 1 (அரிந்து கொள்ளவும்)
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன், பூண்டு பல், பச்சை மிளகாய், நார் நீக்கிய புளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் எல்லாம் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், இறக்கி வைத்து, சிறிது ஆறியதும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு, வெடித்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, உப்பு போட்டு, இரண்டு கொதி வந்ததும், கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.