சீரகச் சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீரகம் - 25 கிராம்

புளி - 2 எழுமிச்சை பழம் அளவு

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

மிளகாய்தூள் - 2 மேசைக்கரண்டி

கரம்மசாலா - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - சிறிது

செய்முறை:

முதலில் புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

சீரகத்தை வறுத்து,சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

புளிகரைத்த தண்ணீருடன் அரைத்த சீரகம், மிளகாய்தூள், கரம்மசாலா, உப்பு கலந்துக்கொள்ளவும். மிதமான தீயில் வைத்து கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்

பின் வாண்லியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து இத்துடன் சேர்க்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: