சின்ன வெங்காய சட்னி (2)
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
எண்ணெய்
கறிவேப்பில்லை
செய்முறை:
வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
குக்கரில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் உப்பு பூண்டு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடவும்
3 விசில் வரும் வரை காத்திருக்கவும்..எடுத்து ஆறவிடவும்
அக்கலவையை மிக்ஸ்யில் அரைக்கவும்.(குக்கரில் உள்ள தண்ணீரை பயன் படுத்திக்கலாம் )
இறுதியில் தாளிக்கவும்..