சின்ன வெங்காய சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 1 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு பட்டாணி அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறிய வெங்காயத்தைத் தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் புளி, மிளகாய்வற்றல், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைப் போட்டு வதக்கவும்.
சுமார் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கியவுடன் இறக்கிப் பயன்படுத்தவும்.