க்ரீன் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - ஒரு கப்

கொத்தமல்லி தழை - 2 கப்

பச்சைமிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)

புளி - கோலி அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காய பவுடர்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

பச்சைமிளகாயை தோல் நிறம் மாறும் வரை வதக்கவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை, உப்பு, புளி, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து அதில் போடவும். க்ரீன் சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ரெடி