கோங்குரா சட்னி
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - 1 கட்டு
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 15 பல்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தனியா (விதை) - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்தெடுக்கவும்.
புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காய வைக்கவும். புளியை கழுவி விட்டு சிறிதளவு (புளி மூழ்கும் வரை) சுடு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஊறிய புளி (மற்றும் புளி தண்ணீர்) மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
அரை கப் எண்ணெயில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் போய் நன்றாக ட்ரை ஆகும் வரை வதக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பூண்டு (பொடியாக நறுக்கியது), பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.
எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். நன்றாக கிளறினால் சுவையான கோங்குரா ரெடி.
குறிப்புகள்:
சுடு சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தோசை, இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.