கொத்தமல்லி சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லிகீரை - 1 கட்டு
சின்னவெங்காயம் - 10
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 சிறுதுண்டு
தேங்காய் துறுவல் - 1/4 கப்
பொட்டுகடலை -1 தேக்கரண்டி
புளி - சிறிது
எண்ணை -1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லிகீரையை சுத்தம்செய்து அலசி வைக்கவும்.
வெங்காயம்,பூண்டு தோல் உரித்துவைக்கவும்.
இஞ்சியை சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி தனியா, சீரகம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய் போட்டு நன்குவதக்கவும்.
கொத்தமல்லி கீரை போட்டு நன்கு சுருள வதக்கவும்.தேங்காய் துறுவல், பொட்டுகடலை, புளி, உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவையான சட்னி ரெடி.