கொத்தமல்லி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - ஒரு கட்டு

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

புளி - ஒரு இன்ச்

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்,புளியை வறுக்கவும் பின் வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்

தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு சேர்த்து கொத்தமல்லி சேர்க்கவும் நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறவைத்து மிசியில் அரைக்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

கடைசியில் தாளித்து சட்னி மேல் ஊற்றவும், சுவையான மல்லி சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.