கேரளா ஹோட்டல் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
வற்றல் மிளகாய் - 6
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
தக்காளி - 5
புளிதண்ணீர் - சிறிது
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், வற்றல், மிளகு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், புளி தண்ணீர் விடவும். அது வற்றியதும், உப்பு போட்டு ஆற வைக்கவும்.
பின்பு மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
பிறகு மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், மிளகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.