குடமிளகாய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குடமிளகாய் - 1

தக்காளி - 2

சீரகம் - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

பூன்டு - 2 பல்

மல்லி தழை - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை தண்ணீர் - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குடமிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக அரியவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி குடமிளகாயை தனியாக வதக்கவும்.

பிறகு தக்காளியை தனியாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், மல்லி போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்

மிக்ஸியில் அனைத்தையும் ஒன்றாய் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். தேவைக்கேற்ப புளிப்பிற்கு எலுமிச்சை ரசம் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்புகள்: