கீரீன் சட்னி
0
தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 25
தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 4 என்னம்
புளி - ஒரு கோலி அளவு
கறிவேப்பிலை - 3 இனுக்கு
கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு,உளுத்தம் பருப்பு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
இதை ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
மீண்டும் வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
அரைத்த சட்னியை ஊற்றி சிறிது நேரம் கழித்து நல்லெண்ணெய் ஊற்றி கொதித்ததும் இறக்கிவிடவும்.