கார சட்னி (3)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - 3/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகை போட்டு வெடிக்க விடவும். பிறகு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பு சற்று லேசாக சிவந்ததும் பெருங்காயத் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 30 நொடி பொன்னிறமாக வதக்கவும்.
கடலைப் பருப்பு பொன்னிறம் ஆனதும் வெங்காயம், மிளகாய் வற்றல், புளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் வற்றல் சிவக்க வேண்டும்.
அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்தில் நைசாக அரைக்கவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இதை இட்லி, ரவா தோசை மற்றும் வெள்ளை அப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்