காரட் சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 100 கிராம்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

முழுப் பூண்டு - 2

இஞ்சி - சிறிது

கடுகு - கால் தேக்கரண்டி

கீறிய பச்சைமிளகாய் - 8

பொடியாக வெட்டிய தேங்காய் சில் - ஒன்று

பெருங்காயம் - மிளகு அளவு

உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கருவேப்பிலை - தேவைக்கேற்ப

கொத்தமல்லி - தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காரட்டை துருவிக் கொள்ளவும். பூண்டை உரித்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பெருங்காயம், உளுந்தம்பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் துருவிய காரட், நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு, கீறிய மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதங்கியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்புகள்: