கலவை சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 கொத்து

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எண்ணை - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

மிளகாயை கீறி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு வெடிக்க விட்டு பருப்பை போட்டு வறுக்கவும்.

பருப்பு சிவந்ததும் வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை உருவி சேர்த்து பிறட்டி இரண்டு நிமிடம் கழித்து தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

இறக்கி ஆற வைக்கவும்.

மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

ஒன்றிரண்டாக அரை பட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: