கலவை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - 1/2 கப்

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி

வரமிளகாய் - 3

பூண்டு - 2

தக்காளி - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

புளி - ஒரு சிறிய கோலிக்குண்டின் அளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுத்ததும் வரிசையாக வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதங்கியதும் தீயைக் குறைத்து விட்டு புளி, தேங்காய் துருவல், மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி தீயை அணைத்து விடவும்.

பிறகு மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்:

சுவையான சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.