கத்திரிக்காய் சட்னி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நாட்டு கத்திரிக்காய் - 1/4 கிலோ

நாட்டு வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சை - 1

தேங்காய் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காயை கெட்டியாக பால் எடுக்கவும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

கத்திரிக்காயை நெருப்பில் காண்பித்து சுடவும். கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கிவிடும். பின்பு ஆறவிட்டு தோல்களை நீக்கி சதைபற்றை நன்கு மசிக்கவும்.

பின்பு நறுக்கியவற்றை சேர்க்கவும். உப்பு, எலுமிச்சைச்சாறு, தேங்காய் பால் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

குறிப்புகள்:

இட்லி தோசை, பிரியாணி சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்