கத்திரிக்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
வேக வைக்க:
கத்திரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 அல்லது 4 பல்
புளி கரைசல் - ஒரு குழிகரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்து தலா - 1 தேக்கரண்டி
பட்டை வத்தல் - 2
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்துருவல் - 3 தேக்கரண்டி
மல்லி இழை - சிறிது
செய்முறை:
வேகவைக்க கொடுத்தவைகளை வேக வைத்து கரண்டியால் நன்றாக மசிக்கவும்
தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து கொட்டவும். மல்லி இலை,தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்