கத்தரிக்காய் தேங்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்

பொடியாக அரிந்த கத்தரிக்காய் - 2 கப்

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 4 பல்

துருவிய தேங்காய் - 1 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை - 1/2 கப்

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

பின் மஞ்சள் தூள் கத்தரிக்காய், உப்பு இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

மிளகாய், பூண்டு, சோம்பு, தேங்காயை மையாக அரைத்து 1 கப் நீருடன் சேர்த்து, கொத்தமல்லியையும் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்கவிடவும்.

குறிப்புகள்: