கத்தரிக்காய் சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
சிறிய கத்தரிக்காய்கள் - 8
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
வற்றல் மிளகாய் - 6
புளி - சிறிய நெல்லி அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய்களை சுட்டு தோல்களை நீக்கி சதைப்பாகத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
3 மேசைக்கரண்டி எண்ணெயில் பொடியாக அரிந்த மிளகாயையும் வெங்காயத்தையும் தக்காளியையும் நன்கு குழைய வதக்கவும்.
ஆறியதும் புளி, கத்தரிக்காய், உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
பாக்கி எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.