கத்தரிக்காய் இஞ்சி சட்னி
0
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்கள் - 6
பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கீழே உள்ளவற்றை நன்கு அரைக்கவும்:
சிறிய வெங்காயம் - 5
துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
செய்முறை:
கத்தரிக்காய்களை தணலில் சுட்டு எடுக்கவும்.
ஆறியதும் சதையை தனியாக பிரித்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, எண்ணெயை ஊற்றவும்.
கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்ததையும், கத்தரிக்காயையும் உப்புடனும் அரை கப் நீருடனும் சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியானதும் இறக்கவும்.