கடலைப்பருப்பு சட்னி (2)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 6
புளி - ஒரு துளி
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் அரை தேக்கரண்டி விட்டு கடலைப்பருப்பு, மிளகாய் போட்டு வறுக்கவும்.
பிறகு அதில் தேங்காய், புளி, உப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியை கொட்டி இறக்கவும்.