கடலைப்பருப்பு சட்னி
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 6
புளி - கோலிகுண்டு அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து தனியே எடுத்து கொள்ளவும். அதே எண்ணெயில் வெங்காயம் வதக்கி எடுத்துகொள்ளவும்.
மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை அரைத்து வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து கடைசியாக வறுத்த பருப்பு, பெருங்காயம் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியை கொட்டி அரை கிளாஸ் தண்ணீர் விட்டு இறக்கவும்.