உள்ளி சம்மந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10

மிளகாய் வற்றல் - 5

புளி - நெல்லிகாய் அளவு

கறிவேப்பிலை - கொஞ்சம்

கடுகு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு அதில் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதில் மிளகாய்வற்றலையும் போட்டு வதக்கி சூடு ஆறியபின்

புளி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

கடாயில் எண்னெய் விட்டு அதில் கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

குறிப்புகள்:

இந்த சம்மந்தி தோசைக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.