உளுத்தம் பருப்பு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 4 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

தக்காளி -2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - 1/2 அங்குல துண்டு

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5

எண்ணெய் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, மிளகாய், உளுத்தம் பருப்பு, இஞ்சி சேர்த்து வறுக்கவும்.

அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

குறிப்புகள்: