உருளைக்கிழங்கு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய உருளைக்கிழங்கு - 4

கொத்தமல்லி - ஒரு கட்டு சிறியது

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி தோல்சீவி விட்டு வட்டமான வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பூண்டு, துறுவிய தேங்காய், புளி, சீரகம், தனியா, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

இதனுடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி போட்டு கலந்து கொள்ளவும்.

இதனை உருளைக்கிழங்கு துண்டுகளின் மேல் பூசி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தளித்து அதனுடன் கிழங்கை போட்டு மெதுவான தீயில் மூடிவைக்கவும். வெந்தவுடன் எடுத்து மசித்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: