உடனடி கார சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய வெங்காயம் - 25

சிவப்பு மிளகாய் - 5

கறிவேப்பிலை - 3 இனுக்கு

கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி

நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு,உளுத்தம் பருப்பு

செய்முறை:

சிறிய வெங்காயம், சிவப்பு மிளகாய்,கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.

பின் வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடித்தபின் அரைத்த கலவையை ஊற்றவும்.

பின் நல்ல எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்தபின் உப்பு போட்டு கொதித்த பின் இறக்கி பரிமாறலாம்.

குறிப்புகள்: