இனிப்பு கார புளிச்சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஆரஞ்சுப்பழ அளவு

சர்க்கரை - 1/4 கோப்பை + 1 மேசைக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் (வறுத்து பொடித்தது) - 1/2 தேக்கரண்டி

சுடுதண்ணீர் - 2 கோப்பை

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து நன்கு கரைத்து திப்பிகள் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் வடிகட்டிய புளிக்கரைசலை ஊற்றி தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மேலும் கால் கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து பச்சைவாசனை நீங்கி கெட்டியாக ஆனவுடன் இறக்கி ஆறவைத்து பீங்கான் குப்பியில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

இந்த புளிச்சட்டினியை எண்ணெயில் பொரித்த காரமான சிற்றுண்டிகளுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: