இனிப்புச் சட்னி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 200 கிராம்

புளி - 50 கிராம்

வெல்லம் - 300 கிராம்

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம் பழம் புளியை சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைத்து ஈரமில்லாத கண்டெய்னரில் நிரப்பி பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணவும்.

மற்றொரு வகை காரச் சட்னி வெல்லத்தை நீரில் காய்ச்சி, வடிகட்டி மீண்டும் லேசான பாகுப் பதம் வரும் வரை காய்ச்சி, வறுத்து அரைத்த சோம்பு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலந்து ஈரமில்லாத கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணவும்.

குறிப்புகள்:

இந்த சட்னி வகைகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

வெல்லத்தால் செய்த இனிப்புச்சட்னி ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் கெடாது.