இஞ்சி எலுமிச்சை சட்னி
தேவையான பொருட்கள்:
இஞ்சி - இரண்டங்குலத் துண்டு
எலுமிச்சைப்பழம் - 4
வினிகர் - 1/2 கோப்பை
எலுமிச்சைச்சாறு - 1/4 கோப்பை
ஆரஞ்சுசாறு - 3/4 கோப்பை
வெங்காயம் - 1
பூண்டு - 2 பற்கள்
பிரவுன் சுகர் - 1/4 கோப்பை + 1 மேசைக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி
செய்முறை:
எலுமிச்சை பழத்தின் தோலை துருவிக் கொள்ளவும். பின்பு பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோலை சீவி துருவி வைக்கவும். வெங்காயத்தையும், பூண்டையும் நொறுங்க நறுக்கி வைக்கவும்.
உலர்ந்த திராட்சையை எலுமிச்சைச்சாற்றில் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு சாஸ் பானில் எலுமிச்சை துண்டுகளைத் தவிர மற்றப் பொருட்களை சேர்த்து போட்டு அடுப்பில் வைத்து வேகவிடவும்.
நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைக்கவும்.
சட்னியானது நன்கு கெட்டியான பதம் வந்தவுடன் நறுக்கிய எலுமிச்சைப்பழத் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கி விடவும்.
குறிப்புகள்:
காரம் தேவையென்றால் சிறிது சில்லி ஃபிளேக்ஸை போட்டுக் கொள்ளலாம்.
நன்கு ஆறியவுடன் பீங்கான் குப்பியில் போட்டு வைத்துக் கொள்ளவும். கிட்ட தட்ட ஒரு மாதம் வரையில் வெளியில் வைக்கலாம்.
அதற்கு மேல் என்றால், சட்னி ஆறியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.