ஆப்பிள் தோல் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் தோல் - 3 ஆப்பிளின் தோல்கள்

தேங்காய்துருவல் - 3/4 கப்

சின்ன வெங்காயம் - 3

பச்சை மிளகாய் (காரத்திற்கேற்ப) - 2

எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பில்லை - 2 கீற்று

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆப்பிள்தோல், தேங்காய்துருவல், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையில் எலுமிச்சைச்சாறு விட்டு கிண்டவும்.

பின்னர் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தாளிப்பை சட்னியில் கலக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: