ஷாஹி சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
புதினா - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி
குங்குமப்பு - 1/4 தேக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
கசகசா - 1 மேஜைக்கரண்டி
பாதாம் - 5
முந்திரி - 5
ஒரு குழிக்கரண்டி எண்ணெயில் பொரித்து எடுத்த வெங்காயம் - 1/2 கப்
செய்முறை:
அரைக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பச்சை மிளகாய் கீரி வைக்கவும்.
குங்குமப்பு பாலில் போட்டு ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கோழியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
இதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த விழுது, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா கலந்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.
கோழி வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது குங்குமப்பு கலந்த பால், கரம் மசாலா கலந்து 2 நிமிடம் விட்டு இறக்கி பரிமாறவும்.