வேர்க்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 பகுதி
முந்திரி அல்லது பாதாம் - 10
புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கிவிட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காய், முந்திரியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் வேர்க்கடலையைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் அரைத்த தேங்காய் முந்திரியைச் சேர்த்து பிரட்டி இரண்டு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையான வேர்க்கடலை குருமா.