வெள்ளை பூரிகுருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

அரைக்க:

இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

தேங்காய் - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

தாளிக்க:

சோம்பு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

பட்டை - 2

லவங்கம் - 3

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன் பின் தேவையான அளவிற்கு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது அவித்து மசித்து வைத்து இருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.

குருமா கொஞ்சம் கெட்டியாக வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

குறிப்புகள்:

பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெள்ளை குருமா ரெடி.