வெள்ளை தட்டைப்பயறு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை தட்டைப்பயறு - 1/2 கப்

பொடியாக நறுக்கிய கேரட் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்

கீறிய பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

கசகசா - 1/2 தேக்கரண்டி

தயிர் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வெள்ளை தட்டைப்பயறை ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின் கேரட், பீன்ஸ், தட்டைப்பயறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அவை பச்சை வாசம் போனதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி வேகவைத்தவற்றை போட்டு கிளறவும்.

பின் அரைத்த விழுது, உப்பு, தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கெட்டியான பின் கொத்தமல்லி இலை, சிறிது நெய் விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: