வெள்ளை குருமா (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 5

கேரட் - 1 பெரிது

உருளை - 1 பெரி்து

பச்சை பட்டாணி - ஒரு கை அளவு

வெங்காயம் - 1 பெரிது

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4 பல்

மல்லி - 1 மேசைக்கரண்டி

புதினா - 1 மேசைக்கரண்டி

பட்டை - 1 துண்டு

லவங்கம் - 3

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1

தேங்காய் துருவல் - 1/4 கப்

முந்திரி - 10

பால் - 1/2 கப்

கசகசா - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கசகசா மற்றும் முந்திரியை வெது வெதுப்பான 1/4 கப் பாலில் ஊற விடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

இஞ்சி பூண்டு தோல் நீக்கி பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைக்கவும்.

வெங்காயம் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாய் மீதம் உள்ளதையும் நறுக்கி வைக்கவும்.

புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.

உருளை, பீன்ஸ், கேரட் நறுக்கி வைக்கவும்.

பட்டாணியை ஊற விட்டு வேக வைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வத்க்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய காய் அலவை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.

காய் வெந்ததும் அரைத்த முந்திரி தேங்காய் கசகசா விழுது சேர்த்து தேவைக்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போக கொதித்ததும் மீதம் உள்ள பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு புதினா கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

தோசை, இட்லி, சப்பாத்தி, சாதம், நெய் சோறு அனைத்துக்கும் நல்ல ஜோடி.